×

15 வீரர்கள் அணி தேர்வில் எந்த குழப்பமும் இல்லை: கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

ராஜ்கோட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஜ்கோட்டில் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும் முதல் 2 போட்டியில் வென்ற இந்தியா 2-0 என தொடரை கைப்பற்றியது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதும், சுப்மன்கில் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய அணிகேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: நான் பேட்டிங் செய்த விதத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நிச்சயமாக நாங்கள் எல்லா வழிகளிலும் வெற்றியை தேட விரும்புகிறோம். கடந்த 7-8 போட்டிகளில் நாங்கள் மிக நன்றாக ஆடினோம். வெவ்வேறு சூழ்நிலைகள் மற்றும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக நாங்கள் சவால்களை எதிர்கொண்டோம்.

அந்தச் சவால்களுக்கு நாங்கள் நன்றாகவே பதில் அளித்தோம் என்று நினைக்கிறேன். துரதிஷ்டவசமாக இன்று நாங்கள் விரும்பிய முடிவு கிடைக்கவில்லை. பும்ரா குறித்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதைவிட அவர் உடல் ரீதியாக மனரீதியாக எப்படி உணர்கிறார்? என்பது முக்கியம். ஒட்டுமொத்தமாக 15 வீரர்களை எடுத்துக் கொண்டால், எங்களுக்கு என்ன வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். நாங்கள் எதிலும் குழப்பம் அடையவில்லை. ஒரு குழுவாக நாங்கள் எங்கு செல்கிறோம் என்பது நன்றாகவே தெரியும், என்றார்.

The post 15 வீரர்கள் அணி தேர்வில் எந்த குழப்பமும் இல்லை: கேப்டன் ரோகித் சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Rochith Sharma ,Rajkot ,India ,ODI ,Australia ,Rokit Sharma ,Dinakaran ,
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...